அனைத்து தேசிய ஊடகங்களிலும் புகைப்படத்துடன் செய்தி! தவறில்லை என்கிறார் சரத் பொன்சேகா

Report Print Kamel Kamel in அரசியல்

புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் புகைப்படங்களை மக்கள் பார்ப்பதில் தவறில்லை என நாடாளுமன்ற உறுபப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

களனி பிரதேசத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் நேற்றைய தினம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் புகைப்படங்கள் ஊடகங்களில் பிரசுரிக்கப்படுவது சரியாயின் அவர்களை மக்கள் பார்ப்பதில் தவறில்லை.

தேசிய புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக மேஜர் ஜெனரல் ஒருவர் நியமிக்கப்பட்ட மறுநாளே அனைத்து தேசிய ஊடகங்களிலும் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

எனவே நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் சிலர் வெளியிட்டு வரும் விமர்சனங்களில் அர்த்தமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.