நாடு திரும்புவது தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச ஆலோசனை

Report Print Kamel Kamel in அரசியல்

எப்போது நாடு திரும்புவது என்பது குறித்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சட்டத்தரணிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்பொழுது சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வரும் கோத்தபாய, சட்டத்தரணிகளை அழைத்து இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சஹாப்ரீ தனது மனைவியுடன் சிங்கப்பூர் நோக்கிப் பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

டி.ஏ.ராஜபக்ச நினைவுத்தூபி நிர்மாணம் தொடர்பில் பாரியளவில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகவும், இந்த சம்பவத்துடன் கோத்தபாய ராஜபக்சவிற்கு தொடர்பு உண்டு எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதி கோத்தபாயவிற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

அத்துடன் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக கோத்தபாயவிற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Latest Offers