கன்னியா வெந்நீரூற்று விவகாரம்! அத்துரலிய ரதன தேரர் என்ன கூறுகிறார்?

Report Print Rakesh in அரசியல்

திருகோணமலை - கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் ஆலயத்திற்கு ஜனநாயக வழியில் உரிமை கோரும் தமிழ் மக்களின் உணர்வுகளை தாம் மதிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த பிரச்சினைக்கு நீதியின் பிரகாரம் தீர்வு காணப்பட வேண்டும் என்பதோடு, அவர்களுக்கு எதிரான வன்முறைகள் எதனையும் சிங்கள - பௌத்த சகோதரர்கள் பிரயோகிக்கக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கன்னியாவில் நேற்றைய தினம் அசாதாரண சூழல் நிலவியிருந்து. இதன்போது தென்கயிலை ஆதீன சுவாமிகள் மீது, சிங்களவர்களால் சுடுநீர் ஊற்றப்பட்டிருந்தது.

இது தொடர்பில் அத்துரலிய ரத்தன தேரரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், தமிழ் - சிங்களவர்களுக்கு இடையிலோ, இந்து - பௌத்த மதத்தினர்களுக்கு இடையிலோ எவ்வித முரண்பாடுகளும் ஏற்படக்கூடாது.

ஜனநாயக வழியில் - நீதியின் பிரகாரம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். இரு இனத்தவர்களும் - இரு மதத்தவர்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம் என கூறியுள்ளார்.


you may like this video


Latest Offers