இலங்கையில் மீளவும் மரணதண்டனை! அமைச்சரவை ஒப்புதல்

Report Print Jeslin Jeslin in அரசியல்

மீளவும் மரண தண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மீரிகம பிரதேசத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என்றும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதியின் மரண தண்டனை தொடர்பான இந்த முடிவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பலரும் தொடர்ந்தும் எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், மரண தண்டனையை நிறைவேற்றுவதை எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை இடைநிறுத்துமாறு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers