ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐ.தே.கட்சிக்குள் மோதல் - மனோ கணேசன் தெரிவிப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளர் யார் என்ற பிரச்சினையை அடிப்படையாக கொண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்போது குழுக்களாக பிரிந்து மோதிக்கொள்வதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதனை தற்போது நன்றாக வெளிப்படையாக காணமுடிகிறது. கட்சிக்குள் தனித்தனியான நிகழ்ச்சி நிரல்களுடன் கூடிய அணிகள் ஒன்றுடன் ஒன்று பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றன எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வேறு பிரச்சினை காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிரிந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உருவாகியது. ஐக்கிய தேசியக் கட்சியை அந்த நிலைமைக்கு கொண்டு செல்ல வேண்டாம் என தான் கீழ் மட்ட உறுப்பினர்கள் சார்பில் தலைவர்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் மனோ கணேசன் கூறியுள்ளார்.

Latest Offers