ஐ.தே.கட்சியில் இணையும் சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள்

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மகிந்த சமரசிங்க மற்றும் மொஹான் லால் கிரேரோ ஆகியோர் விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையுள்ளதாக தெரியவருகிறது.

இதன் காரணமாக கடந்த 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பில் இவர்கள் இருவரும் கலந்துக்கொள்ளவில்லை.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்திருந்த நிலையில், இவர்கள் இருவரும் அந்த தீர்மானத்திற்கு கட்டுப்படாது செயற்பட்டுள்ளனர்.

மகிந்த சமரசிங்க, கடந்த காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மிகவும் நெருக்கமான மற்றும் நம்பிக்கையானவராக செயற்பட்டு வந்ததுடன் தற்போது ஜனாதிபதியிடம் இருந்து தூர விலகி செயற்பட்டு வருகின்றார்.

சமரசிங்க மற்றும் மொஹான்லால் ஆகியோர், ஐக்கிய தேசியக் கட்சியிலேயே தமது அரசியல் பயணத்தை ஆரம்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித் விஜயமுனி சொய்சா, பியசேன கமகே, பௌசி, லக்ஷ்மன் செனவிரத்ன, இந்திக பண்டாரநாயக்க, மனுஷ நாணயக்கார ஆகியோர் ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

Latest Offers