பொது வேட்பாளர் தொடர்பான சிறிய நம்பிக்கையையும் மைத்திரி அழித்து விட்டார்: ஜே.வி.பி

Report Print Steephen Steephen in அரசியல்

மக்கள் விடுதலை முன்னணி உட்பட இடதுசாரிகளின் கூட்டணியின் சார்பில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனநாயகத்தை மதிக்கும் முற்போக்கு கூட்டணியை பிரதிநிதித்துவப்பத்தும் ஒருவரை நாங்கள் வேட்பாளராக நிறுத்துவோம். பொது வேட்பாளர் தொடர்பாக இருந்த சிறிய எதிர்பார்ப்பை கூட மைத்திரிபால சிறிசேன முழுமையாக அழித்து விட்டார்.

இப்படியான வேட்பாளர் அல்ல, நாட்டை கட்டியெழுப்பக் கூடிய வேட்பாளரை நாங்கள் நிறுத்துவோம். ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது வேறு தரப்பில் இருந்து பிரிந்து வரும் நபரை வேட்பாளராக நிறுத்த மாட்டோம். அப்படியான கூட்டணி உருவாகாது எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers