சஹ்ரான் நடத்தியது தற்கொலை குண்டு தாக்குதல்: ரஞ்சன் அணு குண்டு தாக்குதலை நடத்தியுள்ளார்

Report Print Steephen Steephen in அரசியல்

ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை, அமைச்சர் பதவியில் இருந்தும், ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும் நீக்க வேண்டும் என சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தேக சுதத்த தேரர் தெரிவித்துள்ளார்.

ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக செய்துள்ள முறைப்பாடு குறித்து துரிதமாக விசாரணை நடத்த வேண்டும் என கோரி, சிங்கள ராவய அமைப்பின் பிக்குமார்களுடன் இன்று பொலிஸ் தலைமையகத்திற்கு சென்றிருந்த தேரர், அங்கு செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சிங்கள பௌத்தர்களும் சிங்கள கத்தோலிக்கர்களும் ஒன்றாக இணைந்து பெரும் கூட்டமாக அணித்திரண்டு வரும் போது, அதனை குழப்புவதற்காக ரஞ்சன் போன்றவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.

ரஞ்சன் ராமநாயக்க பௌத்த சாசனத்தை துடைத்தெறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீம், அண்மையில் நடத்தியது தற்கொலை குண்டு தாக்குதல். ரஞ்சன் ராமநாயக்க, பௌத்த சாசனத்தின் மீது அணு குண்டு தாக்குதலை நடத்தியுள்ளார்.

சஹ்ரான் போன்றோரின் நோக்கத்தையே ரஞ்சன் ராமநாயக்க போன்றோர் நிறைவேற்றி வருகின்றனர். அவரது பேச்சு காரணமாக தமது பிள்ளைகளை பௌத்த துறவிகளாக துறவரம் அனுப்பும் பெற்றோர், தமது பிள்ளைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என தயக்கம் காட்டலாம் எனவும் சுதத்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

சில பௌத்த பிக்குமார், பௌத்த துறவிகளாக சிறுவயதில் துறவரம் பூணும் சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வருவதாகவும் இப்படியான சூழ்நிலைகளில் வளரும் அவர்கள் பிற்காலத்தில் மனநிலை மாற்றங்களால், புத்தி திரிபுப்பட்டவர்களாக செயற்பட்டு வருவதாகவும் ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் இணைய ஊடகம் ஒன்றில் கூறியிருந்தார்.

Latest Offers