பொதுஜன பெரமுனவின் தாளத்திற்கு ஆட தயாரில்லை: தயாசிறி ஜயசேகர

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து அடுத்த தேர்தலில் போட்டியிடுமாயின் இரண்டு கட்சிகளின் இணக்கத்துடனேயே ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டும் என சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு டாலி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளரை தெரிவு செய்து, அவருக்கு ஆதரவளிக்குமாறு கோரினால், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வேறு தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும்.

பொதுஜன பெரமுனவின் தாளத்திற்கு ஆட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாரில்லை எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers