ராஜாங்க அமைச்சர் ரஞ்சனுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

Report Print Steephen Steephen in அரசியல்

பௌத்த பிக்குகளை அவமதித்தமை சம்பந்தமாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்த பிரதமர் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் பீ. ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

யாங் ஓயா அபிவிருத்தித் திட்டம் காரணமாக காணிகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வு அமைச்சர் தலைமையில் இன்று அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இந்த திட்டம் காரணமாக காணிகளை இழந்த ஹொரவபொத்தானை பிரதேச செயலக பிரிவை சேர்ந்த 36 பேருக்கு 42 மில்லியன் ரூபாய் அமைச்சராக பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்த வைபவத்தின் பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ஹெரிசனிடம் செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர்.

அவற்றுக்கு பதிலளித்த அமைச்சர்,

ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்த சமயத்திற்கும் அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியிட்ட கருத்தை முழுமையாக கண்டிக்கின்றேன். இது பௌத்த நாடு.

பௌத்தர்களின் உயர்விடமே பௌத்த சங்கத்தினர். இதனால், ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்துக்காக பௌத்த மகா சங்கத்தினரிடம் கட்சியின் உறுப்பினர் என்ற வகையில் மன்னிப்பு கோருகிறேன்.

கடந்த காலங்களில் பௌத்த சங்கத்தினரின் ஆலோசனைகள், போதனைகள் மற்றும் எச்சரிக்கைகளை மீறி தலதா மாளிகைக்கு எதிரில் கார் பந்தயங்களை நடத்தினர். அந்த நிலைமை ஏற்படக் கூடாது என்று மக்கள் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தினர்.

இதனால், ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்த பிரதமர் நடவடிக்கை எடுப்பார் எனவும் ஹெரிசன் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers