இலங்கையில் வாழும் அந்நிய இனத்தவர்கள் சிங்கள மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் சிங்களவர்கள் தமிழ் உட்பட ஏனைய மொழிகளை கற்கும் தேவையில்லை எனவும் கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்ச்சியில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நான் நேரடியாக கூறவா... இதனை மூடி மறைத்து பேசி பிரயோசனமில்லை. இலங்கையில் 70 வீதம் சிங்களவர்கள் இருக்கின்றனர். ஏனைய இனத்தவர்களின் 25 வீதம் பேருக்கு சிங்களம் தெரியும். மீதம் இருக்கும் 5 வீதத்தினருக்கு சிங்களம் கற்பிப்பது இலகுவானதா அல்லது 70 வீதமானவர்களுக்கு தமிழ் கற்பிப்பது இலகுவானதா? என அபயதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.
அபயதிஸ்ஸ தேரரின் இந்த கருத்து தர்க்க ரீதியானதாக இருந்தாலும் 1956 ஆம் ஆண்டு ஏற்பட்ட மொழிப் பிரச்சினை, இலங்கையில் இனவாத கலவரம் ஏற்பட காரணமாக அமைந்தது என்பதை, தேரர் மறந்துள்ளார்.
எனினும் இலங்கையின் அரச ஊழியர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொண்டால், அது அவர்களின் பதவி உயர்வுக்கு காரணமாக அமையும் என அபயதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.
மெதகொட அபயதிஸ்ஸ தேரர், ராஜபக்ச தரப்பினருக்கு ஆதரவாக பேசி வரும் ஒரு பௌத்த பிக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
you may like this video