ரணில் நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றாலும் மக்கள் மத்தியில் தோல்வியடைவார்: ரதன தேரர்

Report Print Steephen Steephen in அரசியல்

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வெற்றி பெற்றாலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்வரும் தேர்தலில் மக்களிடம் வெற்றியை பெற்றுக்கொள்ளும் எந்த வாய்ப்பும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை காப்பற்றுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்தது.

எனினும் கீழ் மட்டத்தில் உள்ள இந்து மக்கள் தற்போதைய அரசாங்கத்தை முழுமையாக எதிர்க்கின்றனர். அவர்கள் அரசாங்கத்தை மாற்ற தயாராகி இருக்கின்றனர்.

சம்பிரதாய அரசியலை முடிவுக்கு கொண்டு வந்து, சிங்கள, தமிழ் மக்கள் ஆழமான பிணைப்புடன் பயணித்து வருகின்றனர்.நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றாலும் நாட்டின் மக்கள் மத்தியில் அவர் தோல்வியடைந்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வெற்றி பெற முடிந்தால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு பிரதமருக்கு அழைப்பு விடுக்கின்றேன்.

அப்போது, ரணில் விக்ரமசிங்க மட்டுமல்ல, பிரதமராக பதவிக்கு வர எதிர்பார்த்துள்ள சகல சக்திகளும் தோல்வியடையும் எனவும் அத்துரலியே ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers