சஜித்துக்கும் இன்னும் காலம் இருக்கின்றது- கரு ஜயசூரியவுக்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டும்: புத்திஜீவிகள்

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சபாநாயகர் கரு ஜயசூரிய நிறுத்தப்பட வேண்டும் என புத்திஜீவிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

நீதியான சமூகத்திற்கான ஊடக மத்திய நிலையம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், அவர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

அமைதியான பாத்திரமாக சபாநாயகரை அடையாளப்படுத்த முடியும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மத்துமபண்டார குறிப்பிட்டுள்ளார்.

அரசியலுக்கு அப்பால்,சென்று அவர் செய்த சேவை குறித்து மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள பேராசிரியர் சிசிர பின்னவல, காலத்திற்கு தேவையான, காலத்திற்கு பொருத்தமான அரசியல்வாதியாக கரு ஜயசூரிய மாத்திரமே இருக்கின்றார் எனக் கூறியுள்ளார்.

கரு ஜயசூரிய, ஜனநாயகத்தை பாதுகாக்க அச்சமின்றி செயற்பட்ட நபர் என இந்த செய்தியாளர் சந்திப்பில், கருத்து வெளியிட்டுள்ள களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆரியவங்ச திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாசவுக்கு இன்னும் காலம் இருக்கின்றது. தற்போதைய சந்தர்ப்பத்தை கரு ஜயசூரியவுக்கு வழங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனவும் ஆரியவங்ச திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Latest Offers