அமெரிக்காவுடனான உடன்படிக்கையால் மோசமான பிரதிபலன்கள் ஏற்படும்: வாசுதேவ நாணயக்கார

Report Print Steephen Steephen in அரசியல்

அமெரிக்காவுடன் எக்சா மற்றும் சோபா உடன்படிக்கைகளை கையெழுத்திட்டுள்ளதன் மூலம் இலங்கை எதிர்காலத்தில் மோசமான பிரதிபலன்களை எதிர்நோக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் கடுமையான மோதல் இருந்து வருகிறது. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாகவே இந்த சகல மோதல்களும் ஏற்பட்டுள்ளன.

எக்சா உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டிருந்தாலும் அது பற்றிய எந்த தகவலும் யாருக்கும் தெரியாது. இந்த உடன்படிக்கை காரணமாக அமெரிக்கர்களுக்கு தேவையான செலவுகளை இலங்கையே செய்ய வேண்டும். இந்து சமுத்திரத்தில் தனது கோட்டையை அமைத்து, தனது பலத்தை உறுதிப்படுத்தும் தேவையே அமெரிக்காவுக்கு இருக்கின்றது.

எதிர்காலத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில், மோதல் ஏற்பட்டால், எந்த காரணமும் இல்லாமல் இலங்கை அந்நாடுகளின் மோதலுக்கு சிக்கலாம் எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers