பொலிஸார் மீது குற்றம் சுமத்தும் ஞானசார தேரர்

Report Print Steephen Steephen in அரசியல்

சில பொலிஸ் அதிகாரிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு சட்டத்தை அமுல்படுத்தாமல் தவிர்த்து வருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இந்த விடயம் சம்பந்தமாக பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் கவனம் செலுத்த வேண்டும்.

முஸ்லிம் அடிப்படைவாத குழுக்கள் சம்பந்தமாக பொலிஸாருக்கு தகவல் வழங்குவோர் சில சிக்கல்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers