மைத்திரி - மகிந்த ஆட்சி நீடித்திருக்க வேண்டும்! காரணம் கூறும் வியாழேந்திரன் எம்.பி

Report Print Murali Murali in அரசியல்

சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 97 தமிழ் அரசியல் கைதிகளையும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தியாவது விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் கடந்த திங்கட்கிழமை முதல் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதியை நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் இன்று நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “அரசாங்கத்தை பாதுகாத்துவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக முயற்சிசெய்ய வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன், பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கத்தைக் காப்பாற்றிவிட்டு இனப்பிரச்சினை, காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை என்ற முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணத் தவறிவிட்டார்.

கடந்த வருடம் ஒக்டோபர் 26ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அமைக்கப்பட்ட அரசாங்கம் தொடர்ந்தும் நீடித்திருந்தால் அரசியல் கைதிகளை விடுவித்திருக்க முடியும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers