ரஞ்சன் ராமநாயக்கவை கடுமையாக எச்சரித்த பிரதமர்

Report Print Vethu Vethu in அரசியல்

மஹா சங்கத்தினர் தொடர்பில் எவ்வித விமர்சனங்களையும் மேற்கொள்ள வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னை எச்சரித்ததாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

மஹா சங்கத்தினர் தொடர்பில் தான் எவ்வித விமர்சனங்களையும் மேற்கொள்ளவில்லை எனவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தலை வணங்க தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நான் மஹா சங்கத்தினரை எப்போதும் மதிப்பேன். நான் அனைத்து மதங்களுக்கும் மதிப்பு கொடுப்பேன். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு மதத்திற்கு எதிராகவும் கருத்து வெளியிட எனக்கு அவசியம் இல்லை.

மஹா சங்கத்தினரிடம் மன்னிப்பு கேட்பதற்கு நான் தவறு செய்யவில்லை. தவறு செய்யும் தேரர்கள் என்றால் என்னால் வணங்க முடியாது. ரவுடிகள் போன்று செயற்படும் தேரர்களிடம் என்னால் மன்னிப்பு கேட்க முடியாது. அவர்கள் பௌத்த பிக்குக்கள் அல்ல.

பல பிக்குக்களின் செயற்பாடுகள் தொடர்பில் முறைப்பாடுகள் அடங்கிய ஆவணங்களை பிரதமரிடம் காட்டினேன். அனைத்து தகவல்களும் என்னிடம் உள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.