பண்டைய காலத்தில் பொலன்நறுவைக்கு கப்பல்கள் வந்தன - ஜனாதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்

பண்டைய காலத்தில் திருகோணமலை துறைமுகத்தில் இருந்து பொலன்நறுவைக்கு கப்பல்கள் வந்த காலம் ஒன்று இருந்ததாகவும் இலங்கையின் அந்த பண்டையகால தொழிநுட்பத்தை முந்தி செல்ல உலகிற்கு இன்னும் முடியாமல் போயுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற இளையோர் நிபுணத்துவம் என்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போதைய அதி நவீன தொழிநுட்ப உலகில், ஆயிரம், ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் காணப்பட்ட பண்டைய தொழிநுட்பத்தை தாண்டி எம்மால் செல்ல முடியவில்லை. பொலன்நறுவை நகருக்கு அருகில் திருகோணமலை துறைமுகத்தில் இருந்து கப்பல் வந்த காலம் இருந்தது.

மஹா பராக்கிரமபாகு மன்னர், பொலன்நறுவையில் கப்பல்களில் ஏறி, திருகோணமலையில் இருந்து புறப்பட்டு நாடுகளை பிடித்தார்.

பழைய நீர்பாசன தொழிநுட்பம், விவசாய தொழிற்நுட்பம், தொல் பொருள் தொழிநுட்பம் பற்றி நாம் பேசுகிறோம். உலகம் இதுவரை இந்த தொழிநுட்பங்களில் நம்மை முந்தி செல்லவில்லை என்பது குறித்து இலங்கையர்கள் என்ற வகையில் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும் எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.