கன்னியாவிற்கு வழமை போல மக்கள் சென்று வர உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

Report Print Murali Murali in அரசியல்

கன்னியா வெந்நீரூற்று பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயத்திற்கு வழமை போல மக்கள் சென்று வர உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழர் பகுதிகளில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றமை தொடர்பான ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் இன்று முற்பகல் நடைபெற்றுள்ளது.

இந்த கலந்துரையாலுக்கு அமைச்சர் மனோ கணேசன் அழைப்பு விடுத்திருந்த நிலையில் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் அமைச்சர்களான மனோ கணேசன், திகாம்பரம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான வியாழேந்திரன், வேலுகுமார், திலகர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

கன்னியா, நீராவியடி, கந்தப்பளை உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் கன்னியாவில் வழமைபோல வழிபாடு மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

எனினும் இந்த கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் யாரும் கலந்து கொள்ளவில்லை என தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers