தயாசிறிக்கு ஐ.தே.கட்சியை தோற்கடிக்கும் நோக்கம் இல்லை - ரஞ்சித் சொய்சா

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிக்கும் உண்மையான தேவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இருக்குமாயின், அந்த கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவு செய்யும் வேட்பாளருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவளிக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று தெரிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மக்கள் சார்பான அரசாங்கத்தை உருவாக்க மக்களுக்கான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற தேவையே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு உள்ளது. இதனால், மக்கள் மத்தியில் வரவேற்புள்ள, மக்கள் ஏற்றுக்கொள்ளும் ஒருவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும்.

தயாசிறி ஜயசேகரவுக்கு தான் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற தேவையே இருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிக்கும் நோக்கம் அவருக்கு இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்கும் முயற்சியில் தயாசிறி ஜயசேகர ஈடுபட்டுள்ளார்.

இதன் காரணமாகவே பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், என்ற வார்த்தையை அடிக்கடி கூறி வருகிறார். ஐக்கிய தேசியக்கட்சியை தோற்கடிக்க வேண்டுமாயின், சரியான வேலைத்திட்டங்களும் தலைமையும் இருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணையுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை கேட்டுக்கொள்கிறேன்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைய விரும்பும் சுதந்திரக் கட்சியினர் தம்முடன் இணைந்துக்கொள்ளலாம் எனவும் ரஞ்சித் சொய்சா குறிப்பிட்டுள்ளார்.