மரண தண்டனை குறித்து பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் கேள்வி

Report Print Kamel Kamel in அரசியல்

மரண தண்டனை குறித்து பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நாட்டில் மரண தண்டனை அமுல்படுத்தப்பட்டால் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை, ஐரோப்பாவிற்கு மீன் ஏற்றுமதி, சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் பயங்கரவாத ஒழிப்பு குறித்த சர்வதேச இணக்கப்பாடு என்பன தொடர்பில் சர்ச்சை நிலைமைகள் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அலரி மாளிகையில் இன்றைய தினம் ஆளும் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்துள்ளனர்.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பல்வேறு சர்வதேச தடைகள் தளர்த்தப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

நாட்டுக்கு கிடைக்கப் பெற்று வரும் பல்வேறு நன்மைகள் மரண தண்டனை அமுலாக்கத்தின் ஊடாக இல்லாமல் போய்விடும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களின் பின்னர் பயங்கரவாத ஒழிப்பு தொடர்பில் சர்வதேச சமூகம் வழங்கி வரும் ஒத்துழைப்பு, மரண தண்டனை அமுலாக்கத்துடன் இல்லாமல் போகக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.