ரஞ்சன் நகைச்சுவைகளை அரங்கேற்றுகிறார்

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கத்தின் அமைச்சர்கள் பௌத்த பிக்குகள் உட்பட சமய தலைவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளும் அவமதிப்பான தாக்குதல்களின் பின்னணியில், அந்த கட்சி தலைமையின் நேரடி தலையீடு இருக்கின்றதோ என்ற பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.

அண்மையில், ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, பௌத்த தேரர்களை அவமதிக்கும் வகையில் வெளியிட்ட கருத்தை விமர்சிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

திரைப்படமாக இருந்தாலும் வெறுமையாக ஓடும் போதும் சலிப்பை ஏற்படுத்தும். அப்போது நித்திரை வரும். படம் பார்ப்பவர்கள் தூங்கி விடக் கூடாது என்பதற்காக இடையில் நகைச்சுவை காட்சிகளை இடம்பெற செய்வார்கள்.

தற்போதைய அரசாங்கத்தில் அப்படியான நகைச்சுவை காட்சிகளை ரஞ்சன் ராமநாயக்க அரங்கேற்றி வருகிறார். அதற்காகவே அவர் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார். அரசாங்கத்தில் ஏதாவது சிறிய கோளாறு ஏற்பட்டால், நகைச்சுவைகளை அரங்கேற்றவே ரஞ்சன் ராமநாயக்க இருக்கின்றார்.

அவர் சமூக சேவைகள் பிரதியமைச்சராக இருந்த காலத்தில், திவுலப்பிட்டியவுக்கு வந்து, தான் பெண்களுக்காகவே சமூக சேவை செய்ததாக கூறினார்.

தான் விருப்பத்துடன் தனது சேவையை செய்வதாக அவர் தெரிவித்தார். இதுதான் ரஞ்சன் ராமநாயக்கவின் மனநிலை எனவும் இந்திக அனுருத்த குறிப்பிட்டுள்ளார்.