தேரரின் கருத்தை பிரசாரம் செய்த ஊடகங்கள்! இரண்டு பில்லியன் ரூபா நட்டஈடு கோரும் அமைச்சர் மங்கள

Report Print Murali Murali in அரசியல்

இரண்டு தனியார் ஊடகங்களிடம் தலா ஒரு பில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வண. தினியாவல பாலித தேரரால் முன்வைக்கப்பட்ட பொய்யான கருத்துகளுக்கு பாரிய பிரசாரத்தை பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் இந்த நட்டஈடு கோரப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.