உயர்தரம், சாதாரண தரம் சித்தி பெறாதவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக் கூடாது

Report Print Kamel Kamel in அரசியல்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய பரீட்சைகளில் சித்தி பெறாதவர்களை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக் செய்யக் கூடாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தில் சித்தி எய்தாதவர்களை தெரிவு செய்வது நாட்டின் புத்திஜீவிகளுக்கு செய்யும் அநீதியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத் திட்டங்ளைக் கொண்ட ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடச் செய்ய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு குழுக்களுக்கும் தேவையான நபர்களை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடச் செய்வதில் பயனில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.