கடந்த அரசாங்கம் கண்மூடித்தனமாக கடன் பெற்றுள்ளதால் பாரியளவு பாதிப்புக்கள்! கூறுகிறார் பிரதமர்

Report Print Kamel Kamel in அரசியல்

குண்டுப் பிரச்சினையை விடவும் கடன் பிரச்சினை மிகவும் பெரியது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹெட்டிபொல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களின் பின் நாடு ஸ்திரத்தன்மையை அடைந்துள்ள போதிலும் அதனை விடவும் பெரிய சவால் ஒன்றை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.

கடன் பிரச்சினையினால் நாடு பாரியளவு சவால்களை எதிர்நோக்கியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களை எதிர்நோக்கியது போன்றே பொருளாதார சவால்களையும் எதிர்நோக்க முடியும்.

குண்டுத் தாக்குதல்களின் பின்னர் நாட்டை மீட்க முடியாது என பலர் கருதினார்கள். எனினும் இந்த சவால்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திய மாத்திரத்தில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த அரசாங்கம் கண்மூடித்தனமாக கடன் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், இதனால் பாரியளவு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers