ஜனாதிபதி வேட்பாளர் தெரிவை ரணில் தன்னிச்சையாக எடுக்கக் கூடாது

Report Print Kamel Kamel in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதனை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மட்டுமே தீர்மானிக்க கூடாது என ராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அண்மையில் வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் கூறுகையில், ரணில் மட்டும் தீர்மானித்து ஓர் வேட்பாளரை நியமிப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. கட்சிக்குள் ஓர் பொதுவான ஜனநாயகம் இருக்க வேண்டியது அவசியமானது.

ரணில் விக்ரமசிங்க இரண்டு தடவைகள் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டார், இரண்டு தடவைகள் வெற்றியீட்டுவார்கள் என்ற நம்பிக்கையில் இரண்டு பொது வேட்பாளர்களை நியமித்தார்.

இம்முறையும் வெற்றியடையக் கூடிய வேட்பாளர் ஒருவரையே அவர் தெரிவு செய்வார். எனினும், அந்த வேட்பாளர் தெரிவானது எதேச்சாதிகாரமானதாக இருக்கக்கூடாது என எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

Latest Offers