ஐ.தே.கட்சியால் வெற்றி பெற முடியாது - திலும் அமுனுகம

Report Print Steephen Steephen in அரசியல்

புதிய கூட்டணியை அமைத்து தேர்தலில் போட்டியிட முயற்சித்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியினால் நாட்டை ஆட்சி செய்ய முடியாது என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக்கொள்வதன் மூலம் அந்த கட்சிக்கு ஆட்சி நடத்த முடியாது என்பது ஒப்புவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. இதனால், கூட்டணியாக போட்டியிட்டால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாது.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்போது நெருக்கடி உருவாகியுள்ளது. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் சேறுபூசிக் கொள்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers