கோத்தபாய அமெரிக்க குடியுரிமையை முழுமையாக நீக்கிவிட்டாரா...?

Report Print Jeslin Jeslin in அரசியல்

கோத்தபாய ராஜபக்ச சுதந்திரமாகவே அமெரிக்க குடியுரிமை நீக்கத்தினை செய்துள்ளார். அதில் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை. அவர் அமெரிக்க குடியுரிமையைக் கொண்டிருந்த காலத்திலேயே இலங்கை பிரஜையாக இருந்து நாட்டில் பாரிய சேவை ஆற்றியிருக்கின்றார் என்பதையும் மறந்து விடக் கூடாது என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீது வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டாலும் அவை நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதியே. இது தொடர்பில் எமது உள்நாட்டுச் சட்டங்களில் மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

கோத்தபாய ராஜபக்ச மீது வெளிநாடுகளில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள போதும் எந்தவொரு நீதிமன்றத்திலும் அவர் குற்றவாளி என ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

வெறுமனே வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையானது அவருக்கு எவ்விதமான பாதிப்பினையும் ஏற்படுத்தாது.

கோத்தபாய ராஜபக்ச சுதந்திரமாகவே அமெரிக்க குடியுரிமை நீக்கத்தினை செய்துள்ளார். அதில் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை. அவர் அமெரிக்க குடியுரிமையைக் கொண்டிருந்த காலத்திலேயே இலங்கை பிரஜையாக இருந்து நாட்டில் பாரிய சேவை ஆற்றியிருக்கின்றார் என்பதையும் மறந்து விடக் கூடாது.

மேலும், எமது சார்பில் களமிறக்கப்படும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை மஹிந்த ராஜபக்ஷவே தீர்மானிப்பார். மக்கள் மத்தியில் யாருக்கு ஆதரவு இருக்கின்றதோ, எவரால் வெற்றிபெறமுடியுமோ அவரே எமது வேட்பாளராக அறிவிக்கப்படுவார்

Latest Offers