வெள்ளை வான் கலாச்சாரத்திற்கு பதிலாக இன்று சுவசெரிய அம்பியூலன்ஸ்

Report Print Kamel Kamel in அரசியல்

வெள்ளை வான் கலாச்சாரத்திற்கு பதிலாக தற்பொழுது நாட்டில் சுவசெரிய நோயாளர் காவு வண்டி திட்டம் அமுல்படுத்தப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாரம்மல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

யார் என்ன சொன்னாலும் நாட்டின் அபிவிருத்திப் பணிகள் இடைநிறுத்தப்படவில்லை. கம்பெரலிய திட்டத்தின் ஊடாக பாரியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிதாக சமுர்த்தி பயனாளிகள் ஆறு லட்சம் பேருக்கு நலன் வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு பாடசாலைகளை நிர்மாணித்து வருகின்றது.

அனைத்து பாடசாலை மாணவ மாணவியருக்கும் சுரக்ஷா காப்புறுதி திட்டம் வழங்கப்படுகின்றது.

அபிவிருத்தித் திட்டங்கள் கண்காட்சியாக மேற்கொள்ளப்படவில்லை, மெய்யாகவே மேற்கொள்ளப்படுகின்றது என கூறியுள்ளார்.