ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் உறுதி

Report Print Satha in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஐ.தே.கவின் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சி இதனை முழுமையாக உறுதி செய்து தகவல் குறிப்பு எதனையும் இதுவரை வெளியிடவில்லை.

ஆனாலும் இந்த முடிவு இறுதியும், உறுதியுமான முடிவாக அமையும் என அரசியல் தரப்பினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.