தமிழ் - முஸ்லிம்கள் முட்டிமோதக்கூடாது! ஒரு வாரத்துக்குள் தீர்வு என்கிறார் ரணில்

Report Print Rakesh in அரசியல்

“கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தால் தமிழ் - முஸ்லிம் சமூகத்தினர் முட்டிமோதக்கூடாது. நிர்வாக ரீதியிலான இந்தப் பிரச்சினைக்கு ஒரு வாரத்துக்குள் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.

அதற்கு முன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இது தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளேன்.”

இவ்வாறு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இன்று நேரில் தெரிவித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

“கல்முனை வடக்கு விவகாரப் பிரச்சினைக்குத் தமிழ் - முஸ்லிம் சமூகத்தினரைப் பாதிக்காத வகையில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தனவும் இதில் உறுதியாக இருக்கின்றார்.

எனவே, அவரை இன்றிரவு நீங்கள் நேரில் சந்தித்து உரையாடுங்கள்” - என்று அவர் மேலும் கூறினார்.