கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு நிதி அமைச்சர் எதிர்ப்பு

Report Print Kamel Kamel in அரசியல்

மின்வலு எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

மின்வலு எரிசக்தி அமைச்சினை வேறும் ஓர் இடத்திற்கு கொண்டு செல்வதற்காக 364 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென ரவி யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இன்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாகவும் இந்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும் தற்பொழுது அமைச்சு இயங்கி வரும் கட்டிடத்தை இடம் மாற்றுவதற்கு அனுமதிக்க முடியாது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வாடகை அடிப்படையில் புதிதாக கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில்லை என அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் இதனால் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, போதியளவு இட வசதி இல்லாத காரணத்தினால் வேறும் ஓர் இடத்தில் அமைச்சின் பணிகளை முன்னெடுக்க விரும்புவதாக ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மின்வலு அமைச்சிலிருந்தே பணம் ஒதுக்கி அமைச்சினை இடம் நகர்த்திக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Latest Offers