மஹிந்தவின் பதவியை பறிக்க மைத்திரி திடீர் நடவடிக்கை

Report Print Vethu Vethu in அரசியல்
1084Shares

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுஜன பெரமுன கட்சி மாநாட்டின் தலைமைத்துவத்தை ஏற்றால் மஹிந்த ஏற்றுக்கொள்வாராக இருந்தால், இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மஹிந்த ராஜபக்ச பொது ஜனபெரமுனவின் உறுப்புரிமை பெற்றால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பயனற்று போய்விடும் என்ற காரணத்தினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

பெரமுன கட்சியில் மஹிந்த உட்பட உறுப்புரிமை பெற்றுள்ள உறுப்பினர்களின், சுதந்திர கட்சி உறுப்புரிமையை இரத்து செய்து வேறு சிலரை நியமிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.