எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் டிலான் போன்றவர்கள் நாய் வாலைப் போன்றவர்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்று செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மிகவும் சிறிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி உருவாக்கி வருகின்றது.
இவ்வாறான ஓர் பின்னணியில் குமார வெல்கம போன்ற கட்சியின் சிரேஸ்ட முக்கிய புள்ளிகள் சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி. திஸாநாயக்க, டிலான் பெரேரா போன்றவர்கள் சுதந்திரக் கட்சியின் மீது செய்து வரும் விமர்சனங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதன்போது, இந்த இருவரும் நாய் வாலைப் போன்றவர்கள் எனவும் அவர்களை திருத்த முடியாது எனவும் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.