சிலருக்கு சஜித் மீது பயம் ஏற்பட்டுள்ளது: ஹரின் பெர்னாண்டோ

Report Print Steephen Steephen in அரசியல்
118Shares

ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர் சஜித் பிரேமதாச வெற்றி பெறுவார் என்ற கடும் நம்பிக்கை கொண்டிருப்பதால் சிலருக்கு சஜித் மீது பீதி ஏற்பட்டுள்ளது என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பதுளையில் இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். மேலும் அவர்,

ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்காக, இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நிறுத்தப்பட வேண்டும். அவர் வெற்றி பெறுவார் என்ற கடும் நம்பிக்கை இருக்கின்றது.

இதனால், சிலருக்கு சஜித் மீது பீதி ஏற்பட்டுள்ளது. நாங்கள் கோத்தபாயவுக்கு பயம்.

வேறு காரணங்களுக்காக நாங்கள் பயப்படுகிறோம். வெள்ளை வான் கலாச்சாரம் மட்டுமல்லாது இனவாத கொள்கை அவரிடம் இருப்பதே இந்த பயத்திற்கு காரணம் எனவும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.