மகிந்தவுக்கு தூரநோக்கு பார்வையில்லை: பேராசிரியர் நளின் டி சில்வா

Report Print Steephen Steephen in அரசியல்
74Shares

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு தொலை நோக்கு பார்வையில்லை என சிங்கள தேசியவாதியான பேராசிரியர் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.

அவர் ஜனரஞ்சக அரசியலில் ஈடுபடும் நபர் மட்டுமே எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்சவுக்கு திடம் இருந்தாலும் அவரை வேறுநபர்கள் இயக்குகின்றனர். மைத்திரிபால சிறிசேன கூட மகிந்த ராஜபக்ச இயக்கி வருகிறார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் சம்பந்தமாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவை நியமிக்க மகிந்த ராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சியும் ஆதரவு வழங்கியது எனவும் பேராசிரியர் நளின் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

பேராசிரியர் நளின் டி சில்வா, இலங்கை பொதுஜன பெரமுனவில் கோத்தபாய ராஜபக்சவை ஆதரிக்கும் அணியில் இருந்து வருகிறார். அவர், மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரை கடுமையாக விமர்சித்து வருகிறார்.