மகிந்தவின் கட்சியில் இணைந்தவர்களை 10 முச்சக்கரவண்டிகளில் ஏற்றலாம்

Report Print Steephen Steephen in அரசியல்
77Shares

ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் ஐந்தாம் திகதி உருவாக்கும் புதிய அரசியல் கூட்டணியில் பல முக்கிய அரசியல் கட்சிகள் இணையவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கண்டியில் வைத்து அண்மையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சி வலுவாக ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளும். கடந்த தேர்தலை போன்று எம்முடன் பல அரசியல் கட்சிகள் இணைய உள்ளன. அந்த கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்று எம்முடன் இணைந்து ஆட்சி அமைக்கும்.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த தேர்தலுக்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அண்மையில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான கட்சியில் 10 கட்சிகள் இணைந்தன.

அந்த கட்சியில் உறுப்பினர்களாக இருப்பவர்களை 10 முச்சக்கரவண்டிகளில் ஏற்றலாம். இதுதான் நிலைமை.

எனினும் எதிர்வரும் ஐந்தாம் திகதி ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணையும் கட்சிகளுக்கு நாட்டில் பெரிய வாக்கு வங்கி உள்ளது.

இதுவே பெரிய கூட்டணியாக இருக்கும் என்பது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் எமது கூட்டணி வெற்றி பெறும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சிலரும், ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிப்பார்கள்.

கோத்தபாய ராஜபக்ச போட்டியிட்டாலும் நாங்கள் அவரை எதிர்த்து போட்டியிடுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.