ஐக்கிய தேசியக் கட்சி, நல்லாட்சி என்ற பெயரில் பொறி ஒன்றை வைத்து கடந்த சில ஆண்டுகளில் நாட்டை அழித்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கெஸ்பேவை தொகுதியின் இளைஞர் அதிகார சபையின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இதுவரை நாட்டில் உருவான தலைவர் எவரும் நாட்டின் வரைபடத்தை பெரிதாக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
எனினும் கடலை நிரப்பி, இலங்கை வரைபடத்திற்கு ஒரு பகுதி நிலத்தை சேர்த்த ஒரே தலைவர் மகிந்த ராஜபக்ச எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.