கோத்தபாயவை சரத் ​​பொன்சேகா மிக எளிதில் தோற்கடிப்பார்!

Report Print S.V Kirubaharan S.V Kirubaharan in அரசியல்

சிறிலங்காவின் 2010 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், கொழும்பில் வெளிவரும் ஆங்கில ஊடகமான ‘சண்டே லீடர்’ பத்திரிகையில், ஜனதிபதி தேர்தல் சம்பந்தமாக சில விடயங்களை ஆரூடம் கூறி எழுதியிருந்தேன்.

அக் கட்டுரையில் வென்ற வேட்பாளர் உட்பட எனது கணிப்பு சரியானதாகவே இருந்தது.

துரதிர்ஷ்டவசமாக, ராஜபக்ச குடும்பத்தின் மோசடிகளும் அப்போதைய தேர்தல் ஆணையாளரின் செல்வாக்கும், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற நபர் சிறையில் முடித்ததுடன், தோல்வியுற்றவரும், அவரது குடும்பமும் சிறிலங்காவில் அதிகார மோகம் கொண்டவர்களாக மட்டுமல்லாது, கோடீஸ்வரர்களுமானார்கள்.

“தேர்தலின் பின்னர் ஜனாதிபதியின் வாக்குறுதிகள் என்னவாகும்” என்ற தலையங்கத்துடன் கீழ் உள்ளவற்றை எழுதியிருந்ததாக மனித உரிமைகள் செயற்பாடாளரும், பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குநருமான ச.வி.கிருபாகரன் இவ்வாரம் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கட்டுரையில் மேலும்,

"ஜனாதிபதி ராஜபக்சவிற்கு முன்னால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் சரத் பொன்சேகா கூறியதை நினைவு கூருகிறோம்.

கூட்டமைப்பினர் ராஜபக்சவிடம், வடக்கு கிழக்கில் வாழும் அப்பாவி மக்களை இராணுவத்தினர் சுட்டுக் கொல்வது குறித்து புகார் அளித்ததும், சரத் பொன்சேகா, "தனது வீரர்களுக்கு இலக்குகளைத் தவறவிடாமல் நேரடியாக துப்பாக்கிச்சூடு நடத்தவே, தான் பயிற்சியளித்துள்ளதாக கூறினாராம்." இந்த சம்பவம், ஜெனரல் சரத் பொன்சேகா ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் போட்டியிட எந்த அருகதையும் அற்றவர் என்பதை எடுத்து காட்டுகிறது.

"மக்கள் பயனடைய விரும்பினால், ஜெனரல் சரத் பொன்சேகா இந்தத் தேர்தலில் தோல்வியடைய வேண்டும். ஆனால் அது சாத்தியமில்லை.

அவர் தேர்தலில் வெற்றி பெற்றால், பழைய நண்பர்கள் ஒன்றுபடுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. ராஜபக்ச தேர்தலில் வெற்றிபெறும் சூழ்நிலையில், சரத் பொன்சேகா, ராஜபக்ச பற்றிய இன்னும் அதிகமான பரம இரகசியங்களை கூறுவதற்கு வாய்புள்ளதுடன், இவரை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமாறு அவரது ஆலோசகர்களால் ஊக்குவிக்கப்படலாம்.

இதற்கிடையில், ராஜபக்சக்கள் பொய் ஆதாரங்களுடனான பொய் குற்றச்சாட்டுகளை சரத் பொன்சேகாவிற்கு எதிராக வழக்கை தயார் செய்வார்கள்”.

"என்ன சொன்னாலும் செய்தாலும், ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் அதிகமான நண்பர்கள் எதிரிகளாகவும், எதிரிகள் நண்பர்களாகவும் மறுவார்கள்.

ஜெனரல் சரத் பொன்சேகா ஏற்கனவே வெள்ளைக் கொடி பற்றிய தனது அறிக்கையை, சண்டே லீடரிடம் மறுத்து, திருத்தம் செய்யுமாறு கோரியுள்ளார்.

அப்படியானால், அவரது தேர்தல் வாக்குறுதிகளுக்கு என்னவாகும்? போன்று பல விடயங்களை அடக்கிய கட்டுரையை, 2010ம் ஆண்டு ஜனவரி 10ம் திகதி எழுதியிருந்தேன்.

சரத் பொன்சேகா பற்றி இவற்றை எழுதுவதற்கா, இவர் எனக்கு மிகவும் பிடித்தவர் அல்ல. இருப்பினும், யதார்த்தங்கள் நடைமுறைகள் மற்றும் வாக்காளர்களுக்கு எது நல்லது என்பதுடன் ஒரு ‘மூலோபாய சிந்தனையாளர்’ என்ற அடிப்படையில், மேலே குறிப்பிட்டவற்றை எழுதியிருந்தேன்.

சிறிலங்காவில் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறலாம். வழக்கம் போல், ராஜபக்ச குடும்பம், போர்க்குற்றங்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கு சுமத்தப்பட்டுள்ளவரான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சாவை அவர்களின் அரசியல் கட்சியான சிறிலங்கா மக்கள் முன்னணி சார்பாக தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகின்றனர்.

துரதிர்ஷ்டவசமாக, இதுவரை ஐக்கிய தேசிய கட்சியால் ‘யுத்தத்தின் கதாநாயகன்’ என்று அழைக்கப்படும் கோத்தபாயவுக்கு சமமானா பொருத்தமான ஒரு வேட்பாளரைக் தேர்ந்தெடுக்க முடியவில்லை.

வெளிப்படையாகச் சொல்வதானால், போரின் முடிவில் என்ன நடந்தது என்பதை அறிந்தவன் என்ற வகையில், சிறிலங்காவின் எந்த இராணுவ சிப்பாயையும் ‘யுத்தத்தின் கதாநாயனாக’ கருத மாட்டேன்.

இந்திய வீரர்கள் தான் யுத்தத்தை முடித்தனர் என்பது தான் யாதார்தம். இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. இதனால்தான் இந்தியா சிறிலங்காவிற்கு எதிரான போர்க்குற்றசாட்டுகளை அலட்சியம் பண்ணுகிறது.

இருப்பினும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சியை சார்ந்த ஒரே ஒருவரினால் மட்டுமே கோத்தபாயவை எதிர்த்துப் போட்டியிடவோ அல்லது வெல்லவோ முடியும்.

இதற்கு பல காரணங்கள் உள்ளன. ஐக்கிய தேசிய கட்சியை சார்ந்த ரணில் விக்ரமசிங் உட்பட மற்ற அனைத்து வேட்பாளர்களும் கோத்தபாயாவிடம் மிகவும் மோசமான தோல்வியை தளுவுவார்கள்.

இராணுவத் தலைவராக வாழ்ந்து இன்று அரசியல்வாதியாக திகழும் சரத் பொன்சேகாவே ஐக்கிய தேசிய கட்சியை சார்ந்த சரியான வேட்பாளராக திகழுவார்.

மேலும் அவர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எளிதாக வெற்றி பெறுவார். மீண்டும் மீண்டும் கூறுகிறேன், இவர் எனக்கு மிகவும் பிடித்தவர் அல்ல. சில காரணங்களுக்காக அவர் என்னை வெறுக்கக்கூடும்!

நாம் சரத் பொன்சேகாவை கோத்தபாயவுடன் ஒப்பிடும்பொழுது, இருவரும் தெற்கின் வலுவான சிங்கள பௌத்தர்கள்.

ஆனால் தெற்கில் பரவலாக நடைமுறையில் உள்ள சாதி வேறுபாடு அடிப்படையில் இவர்களிற்கு இடையில் உள்ள வேறுபாடு பற்றி நாம் அறியவில்லை.

கோத்தபாய யுத்த களத்தில் பீதி காரணமாக தனது பதவியை 1990களில் ராஜினாமா செய்துவிட்டு அமெரிக்காவிற்கு தப்பி ஓடியவர்.

அதேசமயம், சரத் பொன்சேகா வலுவான சிப்பாயாக கடமை புரிந்து தளபதி பதவிக்கு உயர்ந்தவர். அவர் கோத்தபாய போல் அல்லாது, தனது செயல்திறன் காரணமாக இராணுவத்தின் உயர் பதவியை ஏய்தியவர்.

கோத்தபாயவோ, தனது சகோதரன் குடும்ப செல்வாக்கினால் உயர் பதவியை அடைந்தவர் என்பதை யாவரும் அறிவார்கள்.

2010ல் ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேக்கவே வெற்றி பெற்றார் என்று பலர் ஆதாரங்களுடன் இன்றும் கூறுகின்றனர்.

ஆனால் வழக்கம் போல் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களின் தேர்தல் ஊழல்கள் மூலம் வெற்றி பெற்றனர். 2010 ஜனாதிபதித் தேர்தல் வேளையில் அப்போதைய தேர்தல் ஆணையாளர் - தயானந்தா திசானாயக்கிற்கு என்ன நேர்ந்தததுவென பலர் கேள்வி கேட்கிறார்கள்? அன்று தேர்தல் ஆணையாளரின் பணியை, பசில் ராஜபக்சவே கையாண்டதாக பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

அன்று பி.பி.சி செய்தி உட்பட பல சர்வதேச ஊடகங்கள், சிறிலங்காவில் நடைபெற்ற ஜனதிபதி தேர்தல் ஊழல்கள் நிறைந்த "அசுத்தமானது" என்று வர்ணித்திருந்தனர்.

தேர்தலை அடுத்து கொழும்பில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றில், சரத் பொன்சேக்காவே ஜனதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதாக மக்கள் கூச்சலிட்டதாக சர்வதேச ஊடகவியலாளர் செய்தி வெளியிட்டிருந்தனர்.

மகிந்த ராஜபக்சா ஏற்கனவே ஆட்சியில் இருந்த காரணத்தினால், 2010 ஜனாதிபதி தேர்தலில் சகல செல்வாக்குகளையும் தனதாக பயன்படுத்தி, ஊழல்களை மறைத்து வெற்றி பெற்றார்.

எதிர்வரவிருக்கும் தேர்தலில், சரத் பொன்சேக்கா கோதபாயாவை எதிர்கொண்டால், மிகவும் எளிதாக வெற்றிபெறுவார். காரணம், தேர்தல் ஆணையாளரையோ, மற்றைய அரசாங்க சேவைகளையோ ராஜபக்ச குடும்பம் தமது செல்வாக்கு மூலம் பெற்றுக்கொள்ள முடியாது.

இருவரும் தெற்கில் ‘யுத்தத்தின் கதாநாயகன்’ என்று அறியப்பட்டாலும், பொன்சேக்காவின் மொழியில் இருவரும் ‘சில்லறை வீராங்கனைகளே’. காரணம் இந்திய இராணுவமே யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்தவர்கள்.

சிறிலங்காவின் படையினர் போலித்தனமாக தம்மை ‘யுத்தத்தின் கதாநாயகர்களாக’ புகழுகின்றனர். இவை ராஜபக்ச ஆட்சிகாலத்தின் வெட்கக்கேடான செயல்கள்.

தெற்கில் உள்ள சிவில் சமூகத்தின் சில உறுப்பினர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். அவர்களுக்கு 2010லும் தற்பொழுதும், சரத் பொன்சேக்கா ஜனாதிபதி வேட்பாளராக நிற்பது பற்றிய விடயத்தில் ஜக்கிரதையாகவுள்ளனர்.

சரத் பொன்சேக்காவும், கோத்தபாயவும் ஒரே மட்டையில் கூடிய குட்டைகள் என எண்ணும் அதேவேளை, “தெரிந்த பிசாசு, தெரியாத தேவதைக்கு மேலானது” என்பதையும் இவர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

இதேவேளை, சரத் பொன்சேக்காவை பொறுத்தவரையில், ‘தான் சர்வதேச விசாரணையை எதிர்கொண்டு, தனது இராணுவத்தினர் அப்பாவிகளென நிரூபிக்க காத்திருக்கின்றார்’.

இவரது இராணுவத்தினர், குற்றவாழியா சுற்றவாழியா என்பதை விசாரணையை தொடர்ந்து நாம் பார்ப்போம்.. ஆனால் இவர் சர்வதேச விசாரணைக்கு சம்மதம் தெரிவிப்பது, பாதிக்கப்பட்ட மக்களிற்கும் சர்வதேச சமூதாயத்திற்கும் ஓர் நற்செய்தி.

அத்துடன், சரத் பொன்சேக்கா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கட்டத்தில், பல காரணங்களிற்காக பெரும் தொகையிலானா அனுதாப வாக்குகளைப் இவர் பெறலாம்.

அவர் 2010 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று, அவமானத்திற்கு மேல் அவமானத்தை எதிர்கொண்டதுடன், அவரது குடும்பத்தினரும் பெரும் கஸ்டங்களை அனுபவித்து, இறுதியில் இவரும் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

அத்துடன், கடந்த ஜனவரி மாதம் முதல் இவருக்கு கிடைக்கவிருந்த சட்ட ஒழுங்கு அமைச்சர் பதவியையும், புத்தி சுவாதீயினமான ஜனதிபதி சிறிசேன மறுத்து வருகிறார். காரணம் சரத் பொன்சேக்கா செல்வாக்கு செலுத்துபவர்களை எட்ட வைத்து, நீதிக்கு முன்னுரிமை அளிப்பார் என்று கூறப்படுகிறது.

கோத்தபாயா ஒரு அமெரிக்க குடிமகன். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக சில நிபந்தனைகளின் அடிப்படையில் தனது குடியுரிமையை விட்டுக்கொடுக்க முயற்சிக்கிறார்.

இதேவேளை, சரத் பொன்சேக்கா, அமெரிக்காவில் நிரந்தர வதிவிட அனுமதி (கிரீன் கார்ட) கொண்டவர். எனவே இருவருக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் கணப்படுகின்றன.

2010 ஆம் ஆண்டில், பொன்சேக்கா, ஒரு பொதுவான வேட்பாளராக இருந்த காரணத்திற்காக, பல ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் அவருக்கு வாக்களிப்பதில் தயக்கம் காட்டியிருந்தனர்.

இவ்முறை, அவர் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டால், அவர் கோத்தபாயாவை எளிதில் தோற்கடிப்பார் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளர் ஒருவரை ஐக்கிய தேசிய கட்சி நிறுத்த விரும்புவதாக இருந்தால், அது சரத் பொன்சேக்காவாகவே இருக்க முடியும். இவை ஐக்கிய தேசிய கட்சியினரின் சிந்தனைக்கானவை.

கடந்த 2010 தேர்தலில், வடக்கு கிழக்கிக்கு வாழ் வாக்காளர்கள், அதாவது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள், சரத் பொன்சேக்கவாவிற்கே வாக்களிந்திருந்தனர். இதன் காரணத்திற்காக, ராஜபக்சா வடக்கு கிழக்கு மக்களை பழிவாங்கினார் என்பது உண்மை.

எதிர்பாராத விதமாக, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாயா வெற்றி பெற்றால், அவர் சிறிலங்காவினால் தடைசெய்யப்பட்ட புலம்பெயர் தேசத்தில் உள்ள தனிநபர் மற்றும் குழுக்களின் பட்டியலை புதுப்பிப்பார்.

இந்த பட்டியலில் எனது பெயர் சேர்க்கப்படவில்லை என்பது சிலருக்கு ஆச்சரியமாக இருந்தது. சில நம்பகரமான தகவலுக்கு அமைய, எனது பெயர் அழிக்கபட வேண்டியவர்களின் பட்டியலில் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதாக அறிந்தோம்.

இதற்கான அறிகுறிகளை, ஐரோப்பாவில், குறிப்பாக பாரிஸில் சில சந்தர்ப்பங்களில் அனுபவித்துள்ளேன். இவை பற்றிய அனைத்தையும் கடந்த காலத்தில் எழுதியுள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers