ஜனாதிபதி வேட்பாளருடன் எழுத்து மூலமான ஒப்பந்தம் செய்து தான் தமிழ் தரப்பு ஆதரவு வழங்க வேண்டும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் 36 ஆவது வெலிக்கடை படுகொலை நாள் நினைவு தினம் நேற்று தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் ஏற்பாட்டில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
தற்போது ஜனாதிபதி தேர்தல் காலம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. இப்பொழுது பல கட்சிகள் ஒப்பந்தத்தை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
தமிழ் தரப்பு கடந்த முறை போன்று அவர் நல்லவர், கெட்டிக்காரர், நெல்சன் மண்டேலா போன்றவர் என்று தனி மனித எந்தவொரு சிங்கள பேரினவாத தலைவர்களையும் நம்பாது தமிழ் மக்களுடைய பிரச்சனைகளை எந்தவொரு சிங்களத் தலைவர் தீர்த்து வைப்பார் என்பதை உணர்வுபூர்வமாக ஏற்றுக் கொள்கின்றாரோ அவருடன் எழுத்து மூலமான ஒப்பந்தத்தை செய்து தான் தமிழ் மக்கள் தங்களது முடிவை எடுக்க வேண்டும்.
அது தான் கொல்லப்பட்ட தமிழ் பற்றாளர்க்கு நாம் செய்யும் அஞ்சலியாக இருக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.