ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி சஜித் பிரேமதாசவை பரிந்துரைக்கவில்லை என்றால், மாற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சஜித் பிரேமதாசவின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செயற்குழுவின் பெரும்பான்மையானவர்கள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சஜித் பிரேமதாசவுக்கு வேட்புமனு வழங்கப்படாவிட்டால், அவர் மற்ற குழு அல்லது கட்சிகளில் சேர்ந்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டுமெனவும் சில ஆதரவாளர்கள் ஆலோசனை வழங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் விரைவில் சஜித் பிரேமதாசவுக்கும், ஆதரவாளர்களுக்குமிடையில் ஒரு உறுதியான கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இருப்பினும், கட்சியின் அனைத்து அதிகார கட்டமைப்புகளிலும் பெரும்பான்மை வாக்குகளை பெற்றுள்ளதால் சஜித் பிரேமதாசவே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.