ஆட்கடத்தல்களில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி! ஆதாரங்கள் இருப்பதாக டக்ளஸ் தகவல்

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்
284Shares

வடக்கில் சவப்பெட்டி கடை அரசியல் செய்யும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் அங்கம் வகிக்கும் சட்டத்தரணி ஒருவர் ஆட்கடத்தலில் ஈடுபட்டவர் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளருமான டக்லஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சிறிதர் தியட்டரில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் அங்கம் வகிக்கும் சட்டத்தரணி ஒருவருடன் ஓர் தொலைக்காட்சி நிகழ்வில் கலந்து கொண்டேன். அவர் என்மீதும் எனது கட்சியின் மீதும் பல கொலை, கொள்ளை கடத்தல் குற்றச் சாட்டுக்களை சுமத்தினார். அப்போது நான் அதற்கு உங்களிடம் ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றின் ஊடாக சட்ட நடவடிக்கையை எடுங்கள் நாம் அதனை வரவேற்போம்..

எம்மில் யாரவது தவறு செய்திருந்தால் நிச்சயம் தண்டனை வழங்கப்பட வேண்டும். சில குற்றச்சாட்டில் ஈடுபட்ட எனது கட்சியை சேர்ந்த சிலரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளேன். அவர்களில் நீதிமன்ற நடவடிக்கையிலும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

எங்கள் மீது குற்றச் சாட்டுக்களை முன்வைத்த முன்னணியை சேர்ந்த அந்த சட்டத்தரணி ஒரு காலத்தில் ஆட்கடத்தலில் ஈடுபட்டவர். அவ்வாறு ஈடுபட்டமைக்கான சான்றுகள் உள்ளன. அவர்களின் உண்மை முகங்கள் உரிய நேரங்களில் வெளிக்கொண்டு வரப்படும்.

இவ்வாறு கடத்தலில் ஈடுபட்ட சட்டத்தரணி பாதிக்கப்பட்ட ஐயர் குடும்பம் ஒன்றுக்காக தாம் இலவசமாக வாதாடியதாக கூறினார். ஆனால் அவர் 5 இலட்சம் வாங்கி வாதாடியுள்ளார்.

இவ்வாறு இந்த சவப்பெட்டி கடை கட்சிக் காரரான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் உள்ள சட்டத்தரணிகள் ஏராளமான பணத்தினை கொள்ளைப் பணமாக கறந்து உழைத்து வருகின்றனர். பின்னர் தேசியம் பேசி மக்களை உசுப்பேத்தி வருகின்றனர் என்றார்.