சஜித் பிரேமதாசவிற்கு ரவி கருணாநாயக்க விடுத்துள்ள சவால்

Report Print Kanmani in அரசியல்
295Shares

குறைந்தபட்சம் க.பொ.த சாதாரண தர பரீட்சையிலாவது தேர்ச்சி பெற்ற ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட வேண்டுமென அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாகக் கூறினால், தனது கல்விச் சான்றிதழ்களை சுவரில் தொங்கவிடாமல் பொதுமக்களுக்கு காட்டுமாறும் இதன்போது சவால் விடுத்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றின் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றிற்கு நேற்று பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

நவீன் திசாநாயக்க, ரணில் விக்ரமசிங்க, கரு ஜயசூரியா ஆகியோர் தமது கல்வி சான்றிதழ்களை சமர்ப்பித்து உள்ளார்கள் என நான் நினைக்கின்றேன்.

அதேபோன்று சஜித் பிரேமதாசவும் ஏதாவது பட்டம் பெற்றிருந்தால் தைரியமாக பொதுமக்களிடம் சான்றிதழ்களை காண்பிக்க வேண்டும் என கூறியுள்ளார்.