ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு செக் வைத்த மகிந்த தேசப்பிரிய

Report Print Jeslin Jeslin in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போலி வேட்பாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேலும், போலி வேட்பாளர் எனக் கண்டறியப்பட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசியல் கட்சி தலைவர்களிடம் மகிந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார்.

ஏனைய வேட்பாளர்களின் வாக்குகளை கைப்பற்றுவதற்காக அல்லது வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் பரப்புரை நேரம் போன்ற வசதிகளை தவறாகப் பயன்படுத்துவதற்காக, மற்றொரு கட்சி அல்லது வேட்பாளரால், யாரேனும் ஒருவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டால், அவரது பெயர் வாக்காளர்களின் முன்பாக அம்பலப்படுத்தப்படும்.

போலி வேட்பாளர்கள் என கண்டறியப்பட்டால், வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் உடனடியாகவே ரத்து செய்யப்படும் என்றும் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பில் மகிந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார்.