கோட்டை விட்ட ரணில்! வெற்றி பெறுவாரா சஜித்?

Report Print Jeslin Jeslin in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவு விவகாரம் பிரதான அரசியல் கட்சிகள் மத்தியில் சூடுபிடித்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களான சபாநாயர் கரு ஜயசூரிய மற்றும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க போன்றோர் தாம் வேட்பாளராக தெரிவு செய்யப்படலாம் என்ற நோக்கில் தனிப்பட்ட துண்டு பிரசுரங்களை அச்சடித்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதில் பாட்டலி சம்பிக்க ரணவக்க போன்றோருக்கு நேரடி விருப்பம் இல்லை.

இந்த நிலையில் தான் கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு ரணில் ஒரு நிலைப்பாட்டிற்கு வந்திருந்ததுடன் சம்பிக்க போன்றோர் இணங்கியிருந்ததாக தெரியவருகின்றது.

மேலும், கரு ஜயசூரிய ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற எண்ணத்தில் அவரது மருமகனான அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கக் கூடிய சிறு சிறு சங்கங்களை தன்வசப்படுத்திக்கொண்டார்.

ஆரம்பத்தில் நவீன் திஸாநாயக்க மீது பல குற்றச்சாட்டுக்கள் அடங்கிய கோவை மகிந்த அணி தம்வசம் வைத்திருந்த நிலையில் அந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து தனது மருமகனை காப்பாற்றுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து 18 பேர் கொண்ட குழுவுடன் விலகிச் சென்று மகிந்த அணியில் சேர்ந்து கொண்டவரே கரு ஜயசூரிய.

நவீன் திஸாநாயக்கவின் அரசியல் எதிர்காலத்தினை கருத்திற்கொண்டு கரு ஜயசூரிய ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு மும்முரமான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் களமிறங்கும் பட்சத்தில், சம்பிக்க ரணவக்க, கரு ஜயசூரிய மற்றும் ராஜித சேனாரத்ன போன்றோர்களால் குழப்பமான ஒரு சூழல் கட்சிக்குள் தோற்றுவிக்கப்படும்.

அந்த சந்தர்ப்பத்தில் தானே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதென ரணில் விக்ரமசிங்க ஒரு வியூகம் வகுத்திருந்தார். எனினும் ஏற்பட்ட குழப்பமான சூழல்களால் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை களமிறக்க வேண்டிய தர்மசங்கடமான சூழலுக்கு ரணில் தள்ளப்பட்டு விட்டார்.

மேலும் இன்று இடம்பெற்ற பௌத்த மாநாட்டில் பௌத்த தலைவர்கள் தம்மை நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்க அழைப்பு விடுப்பார்கள் என்ற எதிர்ப்பார்ப்பும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு இருந்தது.

எனினும், இன்று ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பல குழப்பமான சூழல்கள் எழுந்துள்ள நிலையில் ரணிலின் வியூகம் பிழைத்து விட்டது போன்று தோன்றுகின்றது.


you may like this video