தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எள்ளி நகையாடிய கோத்தபாய

Report Print Rakesh in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனை அண்மையில் சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்,

போர் முடிந்த பின்னர் யாரும் கூறாமலேயே 12,000 முன்னாள் போராளிகளை விடுவித்தோம்.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் எந்தவொரு அரசியல் கைதியையும் விடுவிக்க முடியவில்லை என்று கோத்தபாய சித்தார்த்தனிடம் குறிப்பிட்டுள்ளார்.