ஜனாதிபதியின் கருத்துக்கு நாடாளுமன்றில் எதிர்ப்பு

Report Print Kamel Kamel in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நான்கு இலட்சம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள கருத்துக்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 6ஆம் திகதி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட இந்தக் கருத்தக்கு நேற்று நாடாளுமன்றில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 54,000 ரூபாய் கொடுப்பனவு, எரிபொருள் உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகளை சேர்த்தாலும் இரண்டு இலட்சமே கிடைக்கப்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கூறுவது போன்று நான்கு இலட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கப் பெறுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பிலான சம்பள மற்றும் கொடுப்பனவு பட்டியலை நாடாளுமன்றில் ஆவணமாக சமர்ப்பிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான துசார இந்துனில், ரோஹினி குமார கவிரட்ன, விமலவீர திஸாநாயக்க, தயாசிறி ஜயசேகர உள்ளிட்டவர்களும் சம்பள கொடுப்பனவு பற்றி கருத்து வெளியிட்டிருந்தனர்.

ஜனாதிபதி கூறுவது போன்று யாருக்கும் நான்கு இலட்சம் ரூபாய் கொடுப்பனவாக கிடைப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.