ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மஹிந்தவின் மற்றுமொரு அறிவிப்பு

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி தேர்தலுக்காக புதிய கட்சிகள் பதிவு செய்யப்படமாட்டாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை அடிப்படையாகக் கொண்டு எந்தவொரு அரசியல் கட்சியையும் பதிவு செய்ய போவதில்லை.

எனினும் தற்பொழுது பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளின் பெயர்களில் மாற்றம் செய்ய அனுமதியுண்டு. என்றாலும் சின்னங்களை மாற்ற முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போலி வேட்பாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மஹிந்த தேசப்பிரிய அண்மையில் அறிவித்திருந்தார்.

மேலும், போலி வேட்பாளர் என கண்டறியப்பட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.