இரகசியமாக கோத்தாவை சந்தித்த ஐ.தே.கவின் முக்கிய புள்ளிகள்..?

Report Print Jeslin Jeslin in அரசியல்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை இரகசியமாக சந்தித்துள்ள ஐ.தே.கவின் அமைச்சர்கள் கட்சி உறுப்பினர்களிடம் பொது மன்னிப்புக் கேட்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் அமைச்சர் கபீர் ஹாசிம் மற்றும் பிரதமர் செயலக சபையின் பிரதானியும் அமைச்சருமான சாகல ரத்னாயக்க ஆகியோர் இரகசியமான முறையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவை சந்தித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

இந்த அமைச்சர்கள் அரசாங்கத்தில் உள்ள போது ராஜபக்சக்களை பாதுகாக்கின்றனர். ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்ததும் இவர்களைக் காக்கின்றனர். இதனால் எமது கட்சியினர் செயலிழக்கின்றனர்.

பகலில் ஒரு வேடமும், இரவையில் ஒரு வேடமும் போட வேண்டாம் என இவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன். இவர்கள் எமது கட்சி உறுப்பினர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.