நாடாளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் மகிந்த வெளியிட்டுள்ள தகவல்

Report Print Jeslin Jeslin in அரசியல்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழு மற்றும் அனைத்து விசாரணைக் குழுக்கள் மீதும் எவ்வித நம்பிக்கையையும் வைக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணைகளைத் துரிதப்படுத்த சுயாதீன ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் இல்லத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆராயும் அனைத்து விசாரணை குழுக்கள் மீதும் எவ்வித நம்பிக்கையையும் வைக்க முடியாது.

விசாரணைகள் சுயாதீனமாக இடம் பெறுகின்றதா என்ற சந்தேகம் காணப்படுகிறது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டுகின்றார்கள். விசாரணைகள் தொடர்பில் தான் தொடர்ந்து அதிருப்தியடைவதாக மத தலைவர்கள் குற்றஞ்சாட்டுவது கவனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers